பண்டைய காலத்தில் வழிபாட்டின் தோற்றம்-2
(தொடர்ச்சி)
நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகு மனிதன் மனதிற்கு மேல் ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டான்.
பிறகு ஆன்மாவை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தான். ஆன்ம சக்திக்கு ஜட பொருள்களும் மதிப்பு அளிப்பதை உணர்ந்தான். தனது ஆன்ம சக்தியை சண்டைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களில் பயன்படுத்தி சண்டை செய்வதில் மேலும் நூதன நிலையை அடைந்தான். இதன் மூலம் மந்திர அஸ்திரங்கள் உருவாயின.
இந்த சூழ்நிலையில் இறைவனின் படைப்பின் இரகசியங்களை தமது ஆன்ம சக்தியால் உணர்ந்து கொண்டான்.படைக்கப்பட்டவைகளை வழிநடத்த அருவ நிலையிலும் சில ஆன்மாக்களை இறைவன் படைத்துள்ளதை மனிதன் உணர்ந்து கொண்டான்.
அவற்றுள் முதன்மையானவைகளாக படைத்தல்,காத்தல்,அழித்தல், அருளல்,மறைத்தல் ஆகிய தொழில்களை செய்யக்கூடிய வகையில் அந்த ஆன்மாக்களுக்கு இறைவன் முறையே பிரம்மா,விஷ்ணு,ருத்திரன்,மகேஷ்வரன், சதாசிவன் என்று பதவிகளை வழங்கி அதற்கு ஏற்ற சக்திகளையும் வழங்கியுள்ளதை அறிந்து கொண்டான். அவர்களுக்கு பஞ்சகிருத்தி கர்த்தாக்கள் என்று பெயரிட்டான். அதற்கு முன்னதாக இயற்கை சக்திகளாக நீர்,நெருப்பு,காற்று,ஆகியவைகளை கட்டுபடுத்த இயலுமா என்று ஆய்வு செய்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றான்.
பிறகு கர்த்தாக்களுடன் தொடர்பு கொள்ள இய்ற்கை சக்திகளை பயன்படுத்தி வெற்றிக் கண்டான் இயற்கை சக்திகளை தமது நேரடி கட்டுப்பாட்டில் வைக்க சிரமப்பட்டவன் கர்த்தாக்கள் மூலம் கட்டுப் படுத்துகையில் சுலபமாக சக்திகள் கட்டுப்பட்டன
அது முதல் அவன் இயற்கை சக்திகளுக்கு பஞ்ச பூதங்கள் என பெயரிட்டு அவைகளை கர்த்தாக்களுடன் தொடர்பு கொள்ள சாதனமாக பயன்படுத்தினான். பஞ்ச பூத்ங்களை சாதனமாக வைத்து கர்த்தாக்களை மகிழ்வித்து அதன் பலனை அடைய முடியுமா என முயற்சித்து அதிலும் வெற்றிக்கண்டான்

இந்த வகையில் தாம் வெற்றி பெற கைக்கொண்ட வழி முறைகளையும் அதன் பலனையும் தமது சந்ததியினர்க்கு உரைத்துவைத்தான். இது போன்ற செயல் முறைகள் உலகம் முழுவதும் அங்காங்கே அங்குள்ள இயற்கை பின்னணி,மொழி,வாழ்க்கைமுறை இவைகளை அடிப்படையாகக் கொண்டு நடந்து கொண்டு இருந்தன. ஆனால் விபரங்கள் மட்டும் ஆங்காங்கே இரகசியமாக வைக்கப்பட்டன.
தெய்வநிலை மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அத்துடன் திருப்தி அடையவில்லை. இறைவனால் பஞ்ச கிருத்திகளை செய்ய படைக்கப்பட்ட அருவ நிலை ஆன்மாக்கள் காலப்போக்கில் சிறிது சிறிதாக சக்தி இழந்தார்கள். அந்த சமயத்தில் தெய்வநிலை மனிதர்கள் தமது வழிபாடு மூலம் கர்த்தாக்களுக்கு சக்தியளிக்க இயலுமா என்ற முயற்சி செய்து தோல்வியடைந்தார்கள்.

அந்த கர்த்தாக்களின் வேலைகளை தாம் செய்ய இயலுமா என்று சில தெய்வநிலை மனிதர்கள் முயற்சித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றனர். ஸ்தூல தேகம் இருக்கும் வரை சிறிதளவு வெற்றி பெற்றவர்கள் தேக மறைவுக்கு பிறகு முழுவெற்றியும் பெற்றதை அவர்களுக்கு பின் வந்தவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இந்த வகையில் தமது பலத்தால் மற்றவர்களை தம்மை நோக்கி வணங்க செய்து, தமது மனோபலத்தால் பல செயற்கரிய செயல்களை செய்து, தமது ஆத்ம சக்தியால் தேகம் அழிந்த பின்னரும் தம்மை இறைவனின் பிரதிநிதியாக உருவாக்கிக் கொண்ட மனிதன் ஆணாயிருந்தாலும்,பெண்ணாகயிருந்தாலும் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் அனைத்தும் ஒவ்வொரு புராணமாக ஆங்காங்கே உருவாக ஆரம்பித்தன.
அந்தந்த தேசங்களில் தெய்வக் கதைகள் உருவாகின. நமது பாரத நாட்டை பொருத்தவரை இயற்கை சாதனங்கள் மூலம் இறைத் தொடர்பை உருவாக்க முயற்சித்த செயல்பாடுகள் வேதங்களாக உருவாகின. ஆன்மாவைப் பற்றிய ஆய்வுகள் உபநிடதங்களாக இயற்றப்பட்டன. அந்த சாத்திரங்களைக் கொண்டு மேநிலை அடைந்த மனிதர்களின் வரலாறுகள் கதைகளாகவும், செவிவழி செய்திகளாகவும் பல்லாயிரம் ஆண்டுகள் பரம்பரையாக கூறப்பட்டு வந்தன. சில காலக்கட்டத்தில் மனிதர்களின் வரலாறு மட்டும் மேலும் சில தெய்வத் தன்மைகள் புகுத்தப்பட்டு புராணங்களாக எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து வேதங்களும் உபநிடதங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டன. மனிதனுக்கு தொடர்ந்து பயத்துடன் கூடிய ப்க்தி இருக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வநிலை மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்களுடன் அவர்களின் உருவங்கள் உருவகப்படுத்தப்பட்டன. அவர்களைப் பற்றி வர்ணணைகள் பாதாதிகேசம், கேசாதி பாதம் என்று உருவகப்படுத்தப்பட்டு மக்கள் பயத்துடன் பக்தி விதைக்கப்பட்டது.
பிறகு தெய்வநிலை மனிதர்கள் செயற்கரிய செயல்கள் செய்த நாட்கள் முக்கியமான இறை வெளிப்பாட்டின் நாட்களாக கருதி பண்டிகைகளாக கொண்டாடப்பட்டன.
சில காலங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்ற அரசர்கள் தமது முயற்சியில்லாத தன்மையால் தெய்வத்தன்மை பெற முடியாமல் தவித்தனர். அதனால் பெரும்பாலான அஸ்திர வித்தைகள் மறைந்து போயின. மறுமையிலாவது தான் சக்தி பெற என்ன செய்ய வேண்டும் என தமது குருவாக இருந்தவர்களை வேண்டினர். . குருவாக இருந்தவர்கள் பெரும் செலவினங்கள் செய்து செய்யப்படும் கிரியைகள் மூலம் அந்தப் பயன் அடையலாம் என்று நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
இதன் பயனாக ஆன்மீக ஆய்வாளர்களாக இருந்த குருமார்கள் பெரும் பொருள் பெற்று சடங்குகளை செய்ய வைத்து செயல்பட்டதின் மூலம் தம்து ஆய்வை கைவிட்டு பெரும் சடங்குகள் மூலம் பொருள் தேட முற்பட்டனர். பொருள் நாட்டமானது ஆய்வு வளராமல் இதுவரை நடந்த ஆய்வுகளை கொண்டு செயல்படும் நிலையை தோற்றுவித்தது.
இதனால் ஆன்மீகத்தின் பரிணாம வளர்ச்சி தடைப்பட்டது. பணம் படைத்தவர்களும் தாமாக முயற்சிக்காமல் பெரும் பொருட் செலவில் சடங்குகள் செய்து தம்மை தெய்வத்தன்மையில் உயர்த்திக் கொள்ள முற்பட்டனர்.
இதனிடையில் பொருளாசையின்றி சில உண்மையான ஆய்வாளர்களும் ஆங்காங்கே இறைவனால் தோற்றுவிக்கப் பட்டு ஆய்வுகள் செய்து அவ்வப் போது தடம் புரளும் சமுதாயத்தை நெறிப்படுத்தினர்.
அவ்வாறு நெறிப்படுத்தும் உத்தமர்களை போலியான ஆய்வாளர்களும் தாமும் ஆய்வை செய்யாமல், உண்மை ஞானிகளையும் ஆய்வு செய்ய விடாமல் திசை திருப்ப முயற்சித்தனர். ஞானிகளும் தமது விடாமுயற்சியால் தனக்கு இறைவன் இட்ட கட்டளையை இறைவனின் துணையால் செய்து முடித்து அவ்வப்போது மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.
ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பினை ஏற்றுக் கொண்ட மனிதர்களே ஆய்வை எதிர்க்கும் போது இறைவனே தலையிட்டு அந்தந்த காலகட்டத்திற்கு தக்கவாறு உண்மை ஞானிகளுக்கு அபரிமிதமான ஆன்ம சக்தியை வழங்கி மனித சமுதாயத்தை நெறிப்படுத்துகிறார்.
ஆன்மீக இலக்கணத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு இறைவன் தனது தனிபெருங் கருணையினால் நமது கருணைமிகு ஞானகுரு இராமலிங்கம் எனும் திருவருள் பிரகாச வள்ளல் பெருமானை பிறக்க செய்து மரணமிலா பெருவாழ்வை அவருக்கு வழங்கினார். அதன் மூலமாக இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உண்மை இடைவெளியை பூர்த்தி செய்தார். அது எவ்வாறு பூர்த்தியடைந்தது என்பதையும், அதை ஒவ்வொரு மனிதனும் அனுபவத்தில் எப்படி முயற்சிப்பது என்பதையும் ஓரளவுக்கு மெல்லிய கோடுகளால் உருவகப்படுத்தும் ஆரம்ப நிலை வரைபடம் போல் எம்மை வெளிப்படுத்த கருவியாக்கிக் கொண்டார். எமது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் யாம் இந்த புத்தகத்தில் உருவகப்படுத்த முயற்சிக்கிறோம். இதன் மூலம் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப சித்திரத்தை வண்ணமிட்டு பூர்த்தி செய்து ஏற்படும் அனுபவத்தை எமக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினால், பிறந்த பிறவியின் பயனை அடைந்த சந்தோஷத்தை எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் தனிப் பெருங்கருணைக்கும் நமது ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் அவர்களுக்கும் அர்ப்பணித்து அக மகிழ்வு எய்துவோம்.
(தொடரும்)
(தொடரும்)
No comments:
Post a Comment