Tuesday, April 28, 2020

மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி-3


பண்டைய காலத்தில் வழிபாட்டின் தோற்றம்


சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ்ஜோதி - (அகவல் 211-212)
அப்பா கருணை வள்ளலே நின் கருணையால் நாங்கள் பிறந்தோம், வளர்ந்தோம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்இருக்கும் வரை நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் இறந்தபின் நற்கதி அடைய வேண்டும் என்று பெரும்பாலான நல்ல குணமுள்ள உத்தம மனிதர்கள் இறைவனை நினைத்து வேண்டுவதை இயல்பாக கொண்டு செயல்படுகிறார்கள். இந்த இயல்பிலிருந்து இன்னும் சிறிது மேலாக, பிறந்த மனிதர்கள் அனைவரும் மரணமிலா பெருவாழ்வு அடைய வேண்டும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும், அதற்கு உதாரணமாக தாம் திகழ வேண்டும் என்று இறைவனிடம் கேட்டு ஆன்ம நிலையில் மிக மேலான நிலையான ஞானதேகத்தை ஞானகுருவான திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்கம் ஐயா அவர்கள் பெற்றார்கள். ஆன்மாவிற்கு இதைவிட மேலான நிலை என்று பெறுவதற்கு யாதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபொன்று தெளிவானது.
அந்த ஞான தேக நிலை மனிதன் பெறுவதன் பொருட்டு கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாய சிற்பிகளான ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும் குடும்ப சூழலில் வாழ்ந்த மகான்களும் சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை எழுத வார்த்தைக்ள் இல்லை. அதன் பயனாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு படிநிலைகளை மனித பிறவிக்கு அனுபவத்தால் உணர்த்தி மகோன்னத நிலையை அடைய பாடுபட்டார்கள் என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக ஆய்வு செய்வோம். ஆய்வு என்றாலே ஒரு பொருளை எடுத்துக் கொண்டு நமது பக்குவத்தின் மூலமாகவும், பகுத்தறிவின் மூலமாகவும், அனுபவத்தின் மூலமாகவும், ஏற்கன்வே நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுக்ளின் மூலமாகவும் எந்த அளவு ஆழ்ந்து தெரிந்து கொண்டோம் என்பதை வெளிப்படுதும் முயற்சியாகும்.
பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் தமது புலமையை வெளிப்படுத்த ஒரு சாதனமாகவே ஆய்வை பயன்படுத்துகிறார்கள். அந்த் கருத்துக்கள் எந்த அளவு மக்களை சென்றடையும் என்று சிந்திப்பது இல்லை. அதனால் பெரிய மாற்றங்களும் ஏற்பட்டு விடுவதில்லை. இந்த கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் வள்ளலார் அவர்கள். நாம் எடுத்துச் சொல்லும் கருத்தை மிகவும் எளிய பாணியில் கடுமையான இலக்கண முடிச்சிகளின்றி பெரும்பாலான சாதரண மக்களும் புரிந்து கொண்டு மன ஈடுபாடு கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்பவர். நாமும் அவர் பாணியை பின்பற்றி முடிந்த வரை எளிய நடையில் சுருக்கமாக கூறி அவரவர் அனுபவத்தால் விளக்கம் பெற வழிவகையை இந்த நூலில் உருவாக்குவோம்.
முதன் முதலில் கையால் தாக்கிய சக மனிதனை கல்லெடுத்து தாக்கிய மனிதன் மேலோனாக கருதப்பட்டான். அப்போதே ஆன்மீகம் என்னும் வழிபாடு மனித சமுதாயத்தில் உருவாகி விட்டது. இறைவன் மனிதனை படைத்தார். மனிதன் தன்னால் செய்ய இயலாத, தனது அறிவுக்கு எட்டாத செயல் களையும் சாகசங்களையும் செய்த சக மனிதனை கடவுளாக வழிபட ஆரம்பித்ததின் மூலம் கடவுளர்களை படைத்தான்.
மனித சமுதயாத்தின் ஆரம்ப நாட்களில் ஒரு மனிதனுக்கும் ம்ற்றோர் மனிதனுக்கும் போட்டி அல்லது சண்டை என்றால் இருவரில் ஒருவனின் மரணத்தில் முடியும். அந்த மரண்த்தை தவிர்க்க தோற்றவன் வென்றவனை வணங்கி சண்டையிலிருந்து விலகியதுடன் வென்றவனை கடவுளாக தனது கூட்டத்தார்க்கு கற்பித்தான். அவர்களும் வண்ங்கும்படி செய்தான். மேலும் தனது தோல்வியை கடவுளிடம் தோற்றதாக கூறி சாதாரண மனிதர்கள்க்குதான் வெல்ல முடியாதவ்ன் என்ற கற்பனையையும் பயத்தையும் நிரந்தரமாக்கினான். வென்றவனும் தன்னை கடவுளுக்கு தகுதியானவன் என்று நினைத்து மற்றவர்கள் தன்னை வழிபடும்படியாக ஏற்பாடுகள் செய்து கொண்டான்.
அதே சமயத்தில் இறைவனும் தமது விளையாட்டுக்கு உதவிபுரியும் வகையில் உயிரினங்களுக்கும் ஆன்மாக்களுக்கும் பல படிநிலைகளை அமைத்தார். அதற்கான இலக்கண்ங்களையும் வகுத்தார். அண்ட சராசரங்களை காரணம்,காரியம், இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இயக்கிவந்தார்.
தன்னை கடவுளாக முன்னிலைப்படுத்திக் கொண்டு. மனிதர்களை அடக்கியாண்ட தெய்வநிலை மனிதர்களும் பல்கி பெருகிவிட்டனர். அதனால் அவர்களுக்குள் போட்டி பொறாமைகள் ஏற்பட்டது. அவர்களுக்குள்ளும் சண்டையிட்டுக் கொணடனர். அதன் காரணமாக சண்டையிடுவதில் நூதன ஆயுதங்களின் பிரயோகமே வெற்றி தோல்வியை நிர்ண்யித்து யார் கடவுள் என்பதை உறுதி செய்தது.





இந்த சண்டைகளே பிற்காலத்தில் தேவ, அசுர யுத்தங்களாக புராணங்களில் சித்தரிக்கப்பட்டன. இப்படியே நூதன

ஆயுதங்கள் உருவாக உருவாக யார் தெய்வ நிலை பெற்றவர்கள் என்பதை அவரவரின் அறிவும் ஆயுத பிரயோகத்தன்மையும் அதிகப்படியான ஆயுதங்களை கையாளும் திறனும் மட்டுமே அவர்களின் கடவுள் தன்மையை உறுதி செய்தன.
பெரும் போர்களில் சாகசம் செய்து வெற்றி பெற்றவர்கள் கடவுள் என்ற எழுதப்படாத விதியை மனிதன் உருவாக்கிக் கொண்டான்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மனிதனால் அது சமயத்தில் ஆயுதங்களில் நவீன உத்தியை புகுத்த இயல வில்லை. எனவே இதற்கு மாற்று வழி என்னவென்று ஆய்வு செய்ய ஆரம்பித்தான். மனதை ஒருமுகப்படுத்துவதின் மூலம் ஆயுதமின்றியே உயிரினங்களை பணிய வைக்க இயலும் என்ற பேருண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
மனதை ஒருமுகப்படுத்துவதின் மூலம் கொடிய மிருகங்களையும் அடக்கி அவற்றை தமக்கு கீழ் படிய வைத்து அவற்றை சுலபமாக பிரயாணம் செய்ய பயன்படுத்தி கொண்டான். எவ்வளவு பெரிய கொடிய மிருகங்களை அடக்கி வசபடுத்தி தம்மை நிலை நிறுத்திக் கொண்டான்.
பண்டைய நாட்களில் தனது வாழ்விற்காக ஒவ்வொரு மனிதனும் உடலுழைப்பை செலுத்த வேண்டியிருந்தது. ஆய்வில் ஈடுபட்ட மனிதன் உடலுழைப்பயும் செலுத்திக் கொண்டு ஆய்விலும் ஒரே நேரத்தில் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டான். தெய்வ நிலை மனிதர்கள் இது போன்ற ஆய்வாளார்களுக்கு உடலுழைப்பின்றி வாழ்க்கை நடத்த ஏதுவான வசதிகளையும் பணிவிடைகளையும் செய்து தந்தனர். அதற்கு ஈடாக ஆய்வின் பயனைக் கொண்டு தமது தெய்வத் தன்மையையும் தலைமை பதவியையும் தக்கவைத்துக் கொண்டனர். இதன் மூலம் குரு-சிஷ்யன் உறவு ஏற்பட்டது. இந்த உறவானது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது.
மேலும் இது போன்ற ஆய்வுகளின் பயன்களும் நடைமுறை படுத்தும் வழிமுறைகளும் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.
குருவால் வழங்கப்பட்ட ரகசிய வித்தைகள் அனைத்தும் தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள சீடர்க்ளுக்கு அறிவுரை கூறப்பட்டது. புதல்வர்கள் கூட அந்த வித்தைகள் குருவின் மூலமாக மட்டுமே அடைய அனுமதி வழங்கப்பட்டது.


சீடர்களின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு கல்வி வழங்குவது குருவின் உரிமையாக இருந்தது. ஏனெனில் பக்குவமற்ற மனித்ர்கள் தமது வித்தையை தனயன் குரு என்றும் எதிரி என்றும் வேறுபாடின்றி பயன்படுத்தி ஒரு சிலர் நடந்து கொண்டதால் வித்தையை கற்பிக்கும் உரிமை குருவிடம் இருந்தது. அதில் பயம் கருதியும் பிறகு மரியாதை நம்பிக்கை பெற்றோர்கள் இந்த உரிமையில் தலையிடவில்லை.
இதன் பயனாக தாய், தந்தை, குரு, உறவினர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அரவணைத்து சென்ற மனிதன் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டான். அனைவரையும் தான் கற்றதே பெரிய கல்வி என செருக்கடைந்து அவமான்ப் படுத்தியவன் மக்களால் தெய்வ நிலை போற்றப்படாம்ல் அசுர சக்தியாக பழிக்கப்பட்டான்.
தந்தையாக இருந்தவன் மகனை விட பல வித்தைகள் அதிகமாக கற்றிருந்தாலும் தன் மரண காலத்தில் வாய்ப்பும் இருந்து காலமும் இடம் கொடுத்தால் மட்டும் தமது செயல் திறனை தனது மகனுக்கு கற்பித்தான். பெரும்பாலும் வித்தைகள் குரு மூலமாகவே கற்பிக்கப்பட்டது.
(தொடரும்)

No comments:

Post a Comment