இறைவனிடம் வரம் பெற முதலில் இறைவனை புரிந்து கொள்ள
வேண்டும். இறைவனின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இறைவன்
இருக்கிறாரா, இல்லையா என்று வாதிடுவதில் அர்த்தமில்லை.
இறைவனை நான் பார்க்கவில்லை, ஆகவே இறைவன் இல்லை என்று
நாத்திகவாதிகளும் ஆன்மீகவாதிகள் என்பவர்கள், இறைவனை
முழுமையாக புரிந்து கொள்ளாத நிலையில் அதற்கு விளக்கமளிக்க
இயலாத சூழலும் ஏற்பட்டு அதனால் மனிதனுக்கும் இறைவனுக்கும்
உள்ள தொடர்பு முழுமையடையாமல் குழப்பமேற்படுகிறது.
முழுமையான ஆன்மீகவாதிகளும், நாத்திகவாதிகளும் இருதரப்பினரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் திருவருட்பாவை உருவாக்கி தனது
முழுமையான ஈடுபாடு, எண்ண எழுச்சிகளினால் இறைவனுக்கும்
மனிதனுக்கும் தொடர்பை பூர்த்தி செய்தவர் நமது ஞான
குரு கருணைமிகு இராமலிங்கம் ஐயா அவர்கள். அவரின்
வழிமுறையில் விஞ்ஞானத்தின் வழியாக மெய்ஞ்ஞானத்தை
நாம் சத்விசாரம் செய்ய சிறிது முயற்சி செய்வோம்.
குறிப்பு:
(மேல் உள்ள தகவல் அனைத்தும் என்னுடையது அல்ல. எனக்கு பிடித்தவை ஆன்மிகத்தில் எனக்கு இருந்த ஐயங்களை கலைந்தவை.
ஆன்மிகத்தில் ஈர்பு ஏற்பட செய்தவை என்பதால் கருத்தக்களை மாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்துளேன். இப்படி செய்வது தவறு என்றால் கூறுங்கள் இம்முயற்சியை கைவிடுகிறேன். சரி என்றால் தொடர்கிறேன். )